மகரம் - வார பலன்கள்

வார ராசிப்பலன்

Published On 2022-10-31 15:55 IST   |   Update On 2022-10-31 15:58:00 IST

31.10.2022 முதல் 06.11.2022 வரை

சாதகமான வாரம். ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு ஊர் மாற்றத்தால் சில முன்னேற்றங்கள், மாற்றங்கள் உண்டாகும். இது வரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும்.

ராசி அதிபதி சனிக்கு செவ்வாயின் 8-ம் பார்வை பதிவதால் குறுகிய காலம் தம்பதிகள் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சிலரின் காதல் தோல்வியில் முடியும். சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பிக்கையானவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நடந்தேறும். விரும்பிய வரன் தேடி வரும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். வீரபத்திரரை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News