மகரம் - வார பலன்கள்

வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை

Published On 2025-11-23 10:30 IST   |   Update On 2025-11-23 10:30:00 IST

23.11.2025 முதல் 29.11.2025 வரை

மகரம்

முன்னேற்றமான வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. ஆன்ம பலம் பெருகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். ஆழ்ந்த அறிவும் சிந்திக்கும் திறனும் கூடும். சமூக அந்தஸ்து நிறைந்த முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். விலகி சென்ற உறவுகள், நட்புகள் தேடி வருவார்கள்.

பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். மனச் சங்கடம் மறையும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுபவர்கள் சுய ஜாதகத்தின் படி செயல்படவும். சுப விரயங்கள் அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். அழகான ஆடம்பரமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். அஷ்டலட்சுமி வழிபாட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News