வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை
11.1.2026 முதல் 17.1.2026 வரை
மகரம்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் அஷ்டம அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். முன் கோபத்தால் பகைமை உருவாகும். சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும். முன்னோர் சொத்துப் பிரச்சனை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.
தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406