வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். அஷ்டம ஸ்தானத்தில் கிரகணச் சேர்க்கை ஏற்படுகிறது. பிறர் பிரச்சினைக்காக வீண் பழிகளைச் சுமக்க வேண்டிய நேரம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செய்வதை தவிர்க்கவும். சேமிப்பு கரையும். ஆரோக்கிய தொல்லை ஏற்படும். உரிய மருத்துவ ஆலோச னைகளை மேற்கொள்வது நல்லது.
கடின வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நிதானமாக பேசினால் நன்மை உண்டு. பணமுடைய மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலருக்கு அதிக செலவு காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சிலருக்கு மறுமணத்திற்கு வரன் அமையும். பிரதோஷ நாட்களில் கரும்புச்சாறு அபிஷேகம் செய்து நந்தி பகவானை வழிபட்டால் மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் அதிகமாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406