மகரம் - வார பலன்கள்

வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை

Published On 2025-09-14 16:14 IST   |   Update On 2025-09-14 16:14:00 IST

14.9.2025 முதல் 20.9.2025 வரை

மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். ராசியில் செவ்வாயின் நான்காம் பார்வை பதிகிறது. பூமி, நிலம், வாகன வகையில் லாபம் உண்டாகும். விவசாயம் செழிக்கும். தொழில் ஸ்தான செவ்வாயால் லாபம் பல மடங்காகும். குடும்பத்தில் நிலையான மகிழ்ச்சி உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வெளியூருக்கு பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். 19.9.2025 அன்று காலை 7.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவும்.

சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலத்தில் குடிசை வாசிகளுக்கு குடை, செருப்பு, போர்வை தானம் வழங்க சுய ஜாதக ரீதியான பித்ருக்கள் தோஷம் குறையும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News