மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை

Published On 2025-02-23 11:31 IST   |   Update On 2025-02-23 11:32:00 IST

23.2.2025 முதல் 01.03.2025 வரை

தொழில் வளர்ச்சி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சகாய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெறுகிறார். உங்களின் பலமும், வளமும் அதிகரிக்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள், தாமதங்கள் அகலும். சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும்.

சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காலதாமதம் ஏற்படுவதால் தன் கையே தனக்கு உதவி என்று உணர்வீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து உயர்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினை பிடிக்க முடியும். பணிச்சுமைகள் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.

சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு சிலர் வெளிநாடு செல்லலாம். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்களின் திறமைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும்.

ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய தொழில் புரிபவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் நிலவிய வாக்குவாதம் விலகும். தேக நலனில் இருந்த குறைபாடுகள் அகலும். மகா சிவராத்திரியன்று பச்சரிசி மாவினால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News