மேஷம் - வார பலன்கள்

வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை

Published On 2025-02-16 12:21 IST   |   Update On 2025-02-16 12:23:00 IST

16.2.2025 முதல் 22.2.2025 வரை

தடைகள் தகரும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்திற்கு அசுப கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராசியை சனி பார்த்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அதிகம்.

தற்போது ஏழரைச் சனி துவங்கினாலும் சனியின் பார்வை ராசியில். பதிந்த காலத்தில் ஏற்பட்ட துன்பத்துடன் ஒப்பிட்டால் எதுவும் நடக்காதது போல் இருக்கும். எனவே மனதை அலட்டாமல் நேர்மையுடன், நியாயத்துடன் செய்யக் கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். தடைகள் தகரும்.

இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும். 20.2.25 அன்று காலை 6.49 மணி முதல் 22.2.25 அன்று மாலை 5.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.கருமாரியம்மனை வழிபட்டால் மன நிம்மதி கூடும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News