வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சனி தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானமும், சந்தோஷமும் அதிகரிக்கும். கும்ப ராசியினருக்கு ராஜயோக அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் வாரமாகும். பேச்சில் தெளிவு இருக்கும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.
ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிதமாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகன்று எதிர்ப்புகள் இல்லாத நிலை உருவாகும். கோச்சார சர்ப்ப தோஷத்தால் சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம்.
அரசு வழி காரியங்கள் சித்திக்கும். தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் நிலவிய போட்டி பொறாமைகள் மறையும். பய உணர்வு நீங்கும். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற வாக்கு பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406