- விரதம் என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தது.
- விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது.
விரதம் என்பது நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்தது.
விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.
விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,
அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,
நீர், ஜூஸ், பழங்கள் மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.
இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது.
கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது.
உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.