ஆன்மிக களஞ்சியம்

வடபழனி முருகன் கோவில்!

Published On 2023-08-22 06:47 GMT   |   Update On 2023-08-22 06:47 GMT
  • சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
  • வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

வடபழனி முருகன் கோவில்!

சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீ துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் எற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.

பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

தனிச் சன்னதிகள்

இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.

இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது.

மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது.

இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது.

இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன.

இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

Tags:    

Similar News