ஆன்மிக களஞ்சியம்

உத்திரகோசமங்கையில் 32 வகை மூலிகை அபிஷேகம்

Published On 2024-02-10 18:23 IST   |   Update On 2024-02-10 18:23:00 IST
  • முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
  • அந்த சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.

இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம்.

முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும்.

அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.

ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம்.

அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அந்த சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜர் காட்சி தருவார்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், நம்மீதான தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

இத்தலம் 'ஆதி சிதம்பரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான்,

தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார்.

எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது.

திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகதநடராஜரைப்பார்க்கலாம்.

இரவு 3மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகத நடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகத நடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம்.

வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

மாணிக்கவாசகர் திரு வாசகத்தில் நீத்தல் வண்ணம், திருப்பொன்னூஞ்சல் பாடியது மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அங்கும் உத்தரகோசமங்கை மன்னா என்றும் பாடியுள்ளார்.

இறைவனும், இறைவியும் பள்ளியறையில் அமர்ந்து பூஜை செய்யும்போது பள்ளியறை பாடல் திருஉத்தரகோசமங்கையில் பாடப்பெற்ற பாடலாகும்.

சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூஜை சமயம் தினந்தோறும் பாடப்பட்டுவரும் ''திருப்பொன்னூஞ்சல்'' மாணிக்கவாசகரால் இவ்வாலயத்தில் வைத்து, இயற்றிப் பாடப்பெற்ற சிறப்பையும் பெற்றது.

மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறப் புகழப்பட்டுள்ளது.

Tags:    

Similar News