ஆன்மிக களஞ்சியம்
தியாகராஜர் கோவில்-நேர்த்திக்கடன்கள்
- புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.
- நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த “முகுந்தார்ச்சனை” செய்யலாம்.
தியாகராஜர் கோவில்-நேர்த்திக்கடன்கள்
வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்ம நந்தியை மழை வேண்டி பிரார்த்தித்து, இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும்.
பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி, அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும்.
கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும்.
ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள்.
புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.
ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள்.
தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.
நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த "முகுந்தார்ச்சனை" செய்யலாம்.
முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த "முசுகுந்தார்ச்சனை" செய்யலாம்.