ஆன்மிக களஞ்சியம்

திசைகளும் தீபங்களும்

Published On 2023-11-06 17:38 IST   |   Update On 2023-11-06 17:38:00 IST
  • மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
  • சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

நாம் அன்றாடம் காலையும் மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம்.

தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும்,

அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியுமா?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால்

நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.

கடன் தொல்லைகள் விலகும்.

சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

Tags:    

Similar News