ஆன்மிக களஞ்சியம்

திருவிடைமருதூர் மூகாம்பிகை

Published On 2024-01-25 11:16 GMT   |   Update On 2024-01-25 11:16 GMT
  • இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.
  • இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோவிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோவிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.

இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.

வேறு எங்கும் இல்லை.

தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது.

இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோவிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.

இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News