ஆன்மிக களஞ்சியம்

திருவிடைமருதூர் தீர்த்தச் சிறப்பு

Published On 2024-01-25 11:46 GMT   |   Update On 2024-01-25 11:46 GMT
  • கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தம் சக்தி வாய்ந்தது.
  • மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது.

கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தம் சக்தி வாய்ந்தது.

தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர்.

இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.

இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.

பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவா பரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான்.

பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது.

பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.

Tags:    

Similar News