ஆன்மிக களஞ்சியம்
தண்ணீரே உருவாக அமைந்த ஆண்டவன்-அப்புலிங்கம்
- ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம், என்று பெயரிட்டு வணங்கப்பட்டு வந்தார்.
- அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம்
ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம், அமுதலிங்கம் என்றும் பெயரிட்டு வணங்கப்பட்டு வந்தார்.
திருமுழுக்காட்டவோ, ஏனைய அலங்காரங்களைச் செய்து வணங்கவோ, நீர் உருவத்தில் உள்ள திருவுரு உலகத்தார் வழிபட
வசதிக்குறைவாக இருந்ததால் அழகியதொரு சிவலிங்கம் அமைக்கப்பட்டது.
அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம், கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வளரும் புனிதப்புனல்
"ஸ்ரீமத் தீர்த்தம்" எனப் பெயர் பெற்றது.
தலத்தின் வேறு பெயர்கள்
திருவானைக்கா என்னும் இத்தலம் திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேசுவரம், ஜம்புவீச்சுரம், வெண்நாவல்வனம்,
சம்புவனம், ஞானசேத்திரம், ஞானத்தலம், ஞானபூமி, காவை, தந்திபுகாவாயில், அமுதேசுவரம், நந்திவனம்,
இபவனம் எனப் பெயர் பெற்றது ஆகும்.