ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ பாத தரிசன மண்டபம்

Published On 2023-12-29 12:43 GMT   |   Update On 2023-12-29 12:43 GMT
  • அங்கிருந்து நாற்பது அடி நடந்தவுடன் ஒரு ராஜகோபுரம் தெரியும்.
  • வெங்கடாசலபதி நின்று தரிசனம் தந்த இடத்தில் கல்லில் இரு பாதங்கள் காட்சியளித்தன.

ராமானுஜர், திருப்பதியில் இருந்தபோது அலிபிரி என்றழைக்கப்படும் திருமலை அடிவாரத்தில் அமர்ந்து ராமாயண விரிவுரையை நடத்துவது வழக்கம்.

அவரது மாமனான திருமலை நம்பி, ராமானுஜருக்கு எதிரில் அமர்ந்து ராமாயண கதையைக் கேட்கத் தொடங்குவார்.

ராமானுஜர் கதையை நிறுத்தும் போது பார்த்தால் நாள் கடந்திருக்கும்.

வெங்கடாசலபதிக்கு செய்ய வேண்டிய உச்சிகால பூஜை நேரம் தவறி இருக்கும்.

பெருமாளே, அபச்சாரம் செய்த அடியவனை மன்னித்துவிடு என்று அனுதினமும் அரற்றுவார்.

திருமலை நம்பி இப்படி உருகுவதைக் காணப்பொறுக்காமல், வெங்கடாசலபதியே அடிவாரத்தில் அவர் முன்பு வந்து நின்று காட்சியளித்தார்.

இனி, உச்சிகால பூஜையை அடிவாரத்திலேயே செய்யுமாறு திருமலை நம்பியிடம் அருளிவிட்டு மறைந்தார்.

வெங்கடாசலபதி நின்று தரிசனம் தந்த இடத்தில் கல்லில் இரு பாதங்கள் காட்சியளித்தன.

திருமலை வெங்கடாசலபதியை தரிசிக்க செல்பவர்கள் ஆழ்வார் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அடுத்து வந்தடைவது அலிபிரி என்றழைக்கப்படும் மலையடிவாரம்.

அங்கிருந்து நாற்பது அடி நடந்தவுடன் ஒரு ராஜகோபுரம் தெரியும்.

அதைக் கடந்து சென்றால், வெங்கடாசலபதி திருமலை நம்பிக்குக் காட்சியளித்த இடம் உள்ளது.

அங்கு ஸ்ரீபாத மண்டபம் என்று அழைக்கப்படும் கோவிலில் வெங்கடாசலபதியின் கற்பாதங்கள் கவசங்களுடன் மின்னுகின்றன.

வெங்கடாசலபதி வெற்றுக் கால்களுடன் இங்கு வந்து நின்றுவிட்டதைக் கண்டு பதறி பக்தர்கள் சிலர் அந்த பாதங்களுக்கேற்ற பாதுகைகளை உலோகங்களில் வடித்துச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

அதை தவறாமல் தரிசிக்க வேண்டும்.

Tags:    

Similar News