ஆன்மிக களஞ்சியம்

சோளிங்கர் கல்வெட்டுகள்

Published On 2023-11-25 12:35 GMT   |   Update On 2023-11-25 12:35 GMT
  • சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.
  • வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்ட விவரம் சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

சோளிங்கபுரக் கல்வெட்டுகள் 1896 மற்றும் 1952, 53-ம் ஆண்டுகளில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டன.

நரசிம்மர் குறித்த முக்கிய விவரங்களை மட்டுமே இங்கே காண்போம்.

வேங்கடபதிதேவ மகாராயர் ஆட்சியின் போது சக ஆண்டு 1527 தை மாதத்தில் கந்தாடை அப்பய்யங்கார் விருப்பப்படி

அக்காரக்கனி நரசிங்கப்பெருமாளுக்கு அமுது படிக்குத்தானம் செய்தவர்

சின்ன திம்மய்யன் மகன் சின்ன நாராயணப்பர் ஆவார்.

மடைப்பள்ளியில் உள்ள கல்தொட்டியில் தெலுங்குக் கல்வெட்டு உள்ளது.

அதில் கந்தாளப்ப என்றுள்ளது. சங்கு சக்கரத்துடன் தென்கலை நாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1619-ல் கடிகாசலத்தில் சப்தரிஷி கோவிலும் வரதராஜப் பெருமாள் கோவிலும் கட்டப்பட்ட விவரம்

சின்னமலை அனுமார் கோவில் நுழைவாயிலில் உள்ளது.

ஊர்க்கோவில் நுழைவாயிலில் உள்ள தமிழ் மற்றும் தெலுங்குக் கல்வெட்டுக்கள் சாத்தாத

வைஷ்ணவர் தக்கான் துவஜரோஹணத்தன்றும் தொட்டராசர் திருநட்சத்திரத் தன்றும்

தீபாராதனை செய்ய பொன் வழங்கப்பட்டதைக் கூறுகின்றன.

கி.பி 1633-ல் கிருஷ்ண ஜெயந்தி உரியடி போன்ற விழா செலவுகளுக்கு முதலீடாக 200 காசுகளைப் பாவாடை தம்மு நாயக்கர் ராம தேவராயர் அளித்ததை ஒரு சாசனம் கூறுகிறது.

கி.பி. 1633-ல் ராமராஜா என்பவர் நிலத்தானம் செய்துள்ளார். அக்கார நரசிங்கப்பெருமான் திருவமுது படைக்கவும் 12 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிடவும் இத்தானம் பயன்பட்டது.

13.6 1595-ல் கூடிய வேங்கடபதிராயர் கல்வெட்டு முதன் முதலில் சோளிங்கபுரம் பெயரைச் சுட்டுகிறது.

கி.பி. 1637-ல் வெட்டப்பட்ட சாசனம் தக்கான் நாச்சிமர பூசைக்கும் பிரம்மோற்சவம் முதலிய விழாக்களுக்கும் சாத்தாத அலமேலம்மங்கார் முதலீடு அளித்துள்ளார் என்கிறது.

2-5-1717-ல் ஆண்டாள் சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News