ஆன்மிக களஞ்சியம்

செவ்வாயின் அளவற்ற வீர்யம்

Published On 2024-01-03 11:56 GMT   |   Update On 2024-01-03 11:56 GMT
  • சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.
  • பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.

பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான்.

பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், "செவ்வாய்" என்று பெயரை அடைந்தான்.

கிரேக்க பாசையில் "மாஸ்" எனப் போற்றப்பட்ட இக்கிரகம், பூமி, நிலம், செம்பு, உத்தம சகோதரர்கள், சேனைகளுக்குத் தலைமை, பிடிவாதம், நினைத்ததைச் சாதித்தே தீரும் வல்லமை.

முன்கோபம் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் ஆவார்.

Tags:    

Similar News