ஆன்மிக களஞ்சியம்
- காலவ முனிவர் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார்.
- காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார்.
காலவ முனிவர் சிந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார்.
தன்னுடைய முன்வினைப் பயனால் கூடிய விரைவில் தமக்குத் தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார்.
மிகவும் மனம் நொந்து முகம் புலர்ந்து வாட்டமுற்றார்.
காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள், "சோகத்துக்குக் காரணம் என்ன" என்று கேட்டனர்.
காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள், "காலவரே! முக்காலம் உணர்ந்த மூதறிஞரே! வருவன வந்தே தீரும்.
அதனைத் தீர்க்க வழி நாடாமல் வருந்தலாமா? முன்வினைப் பயனை ஊட்டுகிறவர்கள் நவக்கிரகங்கள்.
அவர்களை நோக்கித் தவம் செய்து வினைப் பயனிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள்" என்று ஆறுதல் கூறினர்.