ஆன்மிக களஞ்சியம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள நெற்களஞ்சியம்

Published On 2024-04-11 17:22 IST   |   Update On 2024-04-11 17:22:00 IST
  • உற்சவ நடராஜர் சந்நிதிக்கு கீழ்புறம் உள்ள பழமையான தட்சிணாமூர்த்தி உருவம் அழகானது.
  • மேலும் ஆயிரங்கால் மண்டபமும் சுந்தரபாண்டியன் கோபுரமும் வனப்பு மிக்க படிவங்கள் பல நிறைந்தவை.

சிற்ப நுணுக்கங்கள் அகிலாண்ட நாயகியின் திரு உருவுக்கு அடுத்த படியாக மிகச்சிறப்புற அமைந்துள்ள இரண்டாம் திருச்சுற்றுத் தென்மேற்கு மூலையில் இருக்கும் வல்லபை கணபதியின் படிமமாகும்.

உற்சவ மூர்த்திகள் இருக்கும் மண்டபத்தின் கொடுங்கைகள் மரத்தால் செய்யப்பட்டது போல தோன்றுமாறு ஆவுடையார்கோவில் பாணியில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

மூன்றாம் திருச்சுற்றில் கீழ்புறம் உள்ள நாலுகால் மண்டபத்தில், நடமாடும் நங்கையர் குறிசொல்லும் குறத்திபோன்ற அழகான சிற்பங்களைத் தாங்கி உள்ளதைக் காணலாம்.

உற்சவ நடராஜர் சந்நிதிக்கு கீழ்புறம் உள்ள பழமையான தட்சிணாமூர்த்தி உருவம் அழகானது.

மேலும் ஆயிரங்கால் மண்டபமும் சுந்தரபாண்டியன் கோபுரமும் வனப்பு மிக்க படிவங்கள் பல நிறைந்தவை.

அகிலாண்ட நாயகி கோவிலின் கீழ்புறம் கோவிலுக்கு வேண்டிய நெல்லைச் சேமித்து வைக்க பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்துள்ள நெற்களஞ்சியம் அறிவியல் ரீதியில் சேமிக்கும் தானியம் கெட்டுப்போகாதபடி நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த பாங்கை இன்றும் உணர்த்தி கொண்டுள்ளது.

மேலும் தற்கால கருங்கற் சிற்பத் திறமையைக் காட்டவென்றே சுவாமி சந்நிதியில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு பெரிய தூண்களும் அவற்றிலுள்ள சிற்பங்களும் உச்சியில் தொங்கும் கற்சங்கிலிகளும் அழகு செய்கின்றன.

Tags:    

Similar News