ஆன்மிக களஞ்சியம்

ஒளிமயமான வாழ்வு

Published On 2023-12-17 18:25 IST   |   Update On 2023-12-17 18:25:00 IST
  • சிவபெருமானோ தீ, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கண்களை உடைய ஜோதி வடிவம்.
  • எனவே அவருக்கு இரவுமில்லை. பகலும் இல்லை.

சூரியன் மறைந்து சந்திரன் தோன்றும்போது இரவு வருகின்றது.

திங்கள் மறைந்து ஆதவன் விழிக்கும்போது பகல் பிறக்கின்றது. இது பிரபஞ்சத்தைப் பொருத்த விஷயம்.

சிவபெருமானோ தீ, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கண்களை உடைய ஜோதி வடிவம்.

எனவே அவருக்கு இரவுமில்லை. பகலும் இல்லை.

எனினும் பக்தர்களின் பாவங்களை நீக்க லிங்கத் திருமேனியாக சிவராத்திரி அன்று தோன்றினார்.

அன்றிரவு அவரை தரிசிப்பவர்க்கு தமோ குணம் என்னும் இருள் விலகி சிவ பக்தி என்னும் ஒளி, வாழ்க்கை உண்¢டாகும்.

வம்சம் தழைக்கும்!

சிவபெருமானுடைய அட்ட வீரட்டத் தலங்களில் அசுர யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட கஜ சம்ஹார கோலம் மிகவும் முக்கியமானது.

சைவத் திருமுறைகள் பலவற்றில் அண்ணலின் இந்தக் கோலம் பாடப்படுகின்றது.

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருவழுவூரில் சிவபெருமானின் கஜ சம்ஹார கோலத்தைக் காணலாம்.

தங்களது வசம்சம் தழைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், வழுவூரில் உள்ள பாலாங்குராம்பிகையையும் கஜ சம்ஹார மூர்த்தியையும் தரிசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

இதை உணர்த்தும் விதத்தில் இளங்கிளை நாயகி (பாலாங்குராம்பிகை) என்ற இனிய பெயரை தாங்கி, இங்கு தாயார் தரிசனம் அளிக்கின்றாள்.

Tags:    

Similar News