- “மாதங்களுள் நான் மார்கழி” என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.
- இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும்.
"மாதங்களுள் நான் மார்கழி" என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.
இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும்.
மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது.
அதனால் அம்மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சவுபாக்கியங்களையும் அளிக்கிறது.
நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னி ரென்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன.
இதில் முதல் நாமமாக விளங்கும் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.
ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாத மாகக் கருதப்படும் இம்மார்கழி மாதம் "மார்க் சீர்ஷம்" என்பர்.
அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது.
இம்மாதத்தை கிரிபிரதஷிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள்.
இராம காதையில் இளையபெருமாள் ஸ்ரீராமபிரானிடம், "ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான காலம் வந்திருக்கிறது.
இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுமே அலங்கரிக்கப்பட்டது போல் விளங்குகிறது"என்று கூறுகிறார்.