- இவ்வாறு வாயில் முன்புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டையகாலம் தொட்டே நிலவி வருகின்றது.
- இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகி கோலமிட்டு, சாணத்தினைப் பிடித்து வைத்து அதன் மீது பரங்கி பூவை, மகுடம் வைத்தாற் போல் அழகுற வைப்பர்.
அதனைச்சுற்றி வித விதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர்.
இவ்வாறு வாயில் முன்புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டையகாலம் தொட்டே நிலவி வருகின்றது.
அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கதை ஒன்றுண்டு.
பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதத்தில் தான்! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர், மீண்டவர் பலர்.
பாண்டவர்களின் வீட்டை அடையாளம் கண்டு கொள்வதற்காக வேண்டி, வியாசர்,வீட்டு வாயிலில் சாணம் இட்டு மெழுகி ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம்.
அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்த காலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கவுரவர்களின் தாக்குதல் ஏற்படாமல், கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார்.
அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது.
இம் மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆசாரியர்களும், சைவ பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர்.
இம் மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர்.
இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவசமுறுவர்.
ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
இம் மாதத்தில், எம் பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதிப்பதனை "கூடார வல்லி" என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
இதன் உண்மை தத்துவத்தை "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்ற பாட்டால் பாவை ஆண்டாள் நமக்கு ஆழகுற மொழிகின்றாள்.
மார்கழி மாதத்தில் மதி மறைந்த நந்நாள் மூல நஷத்ரம் கூடிய சுப தினத்தில் ஆஞ்சநேயருடைய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து,பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம்.