ஆன்மிக களஞ்சியம்

கடுந்தவம் புரிந்த காலவமுனிவர்

Published On 2024-02-01 17:26 IST   |   Update On 2024-02-01 17:26:00 IST
  • அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களைத் தியானித்துக் கடுந்தவம் புரிந்தார்.
  • தம்மை நோக்கித் தவம்புரியும் காலவமுனிவரின் முன் நவநாயகர்கள் ஒரு சேர வந்து காட்சி கொடுத்தார்கள்.

காலவ முனிவருக்கு இமயமலைச் சாரலில் இருக்க மனம் கொள்ளவில்லை.

அதனால் விந்தியமலைச் சாரலுக்கு வந்தார்.

ஒரு நல்ல நாள் பார்த்துப் பஞ்சாக்கினி (நான்கு திசைகளிலும் மூட்டம் நான்கு அக்கினியும் மேலே காய்கின்ற சூரியனும் ஆகிய ஐவர் அக்கினியே பஞ்சாக்னி) வளர்த்தார்.

அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களைத் தியானித்துக் கடுந்தவம் புரிந்தார்.

தவம் முதிரத் தவத்தின் அக்கினிச் சுவாலை நவக்கிரக மண்டலங்களைத் தாவியது.

சுவாலையின் வெம்மையை நவக்கிரகங்கள் உணர்ந்தனர்.

தம்மை நோக்கித் தவம்புரியும் காலவமுனிவரின் முன் நவநாயகர்கள் ஒரு சேர வந்து காட்சி கொடுத்தார்கள்.

காலவ முனிவர் அக்கினியிலிருந்து வெளியே வந்து நவநாயகர்களின் முன்னே விழுந்து வணங்கினார்.

எழுந்து நின்று கண்களில் ஆனந்தநீர் வழியக் கைகளைத் தலைமேல் கூப்பி நின்று தோத்திரம் சொல்லித் துதித்தார்.

காலவ முனிவரின் பரவச நிலையைக் கண்டு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள், "முனிவரே உமது தவத்திற்கு மகிழ்ந்தோம்.

உமக்கு என்ன வரம் வேண்டும்" என வினவினர்.

காலவ முனிவர் நவநாயகர்களை நோக்கி, "நவமண்டல அதிபர்களே! வினைப் பயன்களையூட்டும் தேவர்களே! அடியேனை தொழுநோய் பற்றும் நிலை உள்ளது.

அந்தத் தொழுநோய் என்னை அணுகாதபடி வரம் தர வேண்டும்" என்று விண்ணப்பித்து கொண்டார்.

நவநாயகர்களும் "அவ்வண்ணமே ஆகுக" என்று வரம் தந்து மறைந்தனர்.

Tags:    

Similar News