ஆன்மிக களஞ்சியம்

தெய்வீக வேப்ப மரம்

Published On 2023-11-27 12:23 GMT   |   Update On 2023-11-27 12:23 GMT
  • இந்த வேப்பிலை மிகவும் இனிமையாக இருப்பதாக சொல்லி தொடர்ந்து சாப்பிடுகிறான்.
  • அந்த இலைகள் வழக்கத்துக்கு மாறாக தேனினும் இனிமையாக இருந்தது.

சிறுவனின் தியானம் பற்றி கேள்விப்பட்டு கிராம மக்கள் அங்கே கூடி நிற்க,

இந்த செய்தி கேள்விப்பட்டு ஊர் தலைவர் பாட்டியா அங்கே வந்து சேர்கிறார்.

அந்த சமயம் அந்த பாலகன் கண் விழித்து வேப்ப இலைகளை சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்த கங்காபாய்

தன்னுடைய தாய்மை உணர்வு உந்தப்பட்டு, அந்த பாலகனுக்கு உணவை தயாரித்து எடுத்து வருகிறார்.

தான் கொண்டு வந்த உணவை அந்த சிறுவனை சாப்பிடும்படி கங்காபாய் வேண்டி நிற்க,

அந்த பாலகனோ மறுத்து இந்த வேப்பிலையே தனக்கு உணவு என்று சொல்லி மேலும் அது மிகவும்

இனிமையாக இருப்பதாக சொல்லி தொடர்ந்து சாப்பிடுகிறான்.

இதனை கேட்டு திடுக்கிட்ட கங்காபாய் தனக்கும் சில இலைகளை தரும்படி கேட்டு வாங்கி சுவைக்க

அந்த இலைகள் வழக்கத்துக்கு மாறாக தேனினும் இனிமையாக இருக்க, அந்த தருணத்தில் ஊர் பூசாரி

மகல்சாபதியும் வந்து வாங்கி உண்டு மகிழ்ந்து இருந்த நிலையில், ஊர் தலைவர் பாட்டியாவிற்கு

கொடுக்கப்பட்ட இலைகள் அவரது உள்ளம் போலவே மிகவும் கசப்பு சுவையுடன் இருக்கிறது.

பாட்டியா அந்த பாலகனை போலி மந்திரவாதி என்று நினைத்து கடும் சொற்களால் திட்டி ஊரை விட்டு துரத்தும் படி கட்டளையிடுகிறார்.

அன்று இரவு பெருமழையும், பேரிடியுமாக இயற்கை பெரும் தாண்டவம் ஆட, அந்த பாலகன் நிலை குறித்து

கவலை கொண்டவளாய் கங்காபாய் வீட்டின் ஜன்னல் வழியே வெளியே பார்க்க அங்கே ஒரு அற்புத காட்சியை காண்கிறாள்.

வேப்ப மரத்தின் முன் நிலம் இரண்டாக பிளக்க, அந்த பாலகன் பூமி உள்ளே சென்று பின்

பூமி பழைய நிலைக்கு சமமாக மாறுவதைக் கண்டு வணங்குகிறாள்.

Tags:    

Similar News