ஆன்மிக களஞ்சியம்

பிரம்மன் கொடுத்த பெருஞ்சாபம்

Published On 2024-02-01 17:28 IST   |   Update On 2024-02-01 17:28:00 IST
  • அதனால் பிரமதேவர் சினம் கொண்டார். நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார்.
  • தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

இந்தச் செய்தி பிரமதேவருக்குத் தெரிய வந்தது.

அதனால் பிரமதேவர் சினம் கொண்டார். நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார்.

அவர்களை நோக்கி, "நவக்கிரகங்களே! நீங்கள் தேவர்களாக இருந்தாலும், எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள்.

தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.

சிவபெருமானின் ஆணைப்படியும், காலதேவனின் ஆணை கொண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவரது வினைப் பயன்களையூட்டுவதற்காகவே உங்களை யாம் படைத்தோம்.

அவ்வாறு செயல்படவே உங்களுக்கு உத்தரவிட்டோம்.

ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் மீறி நடக்கத் தொடங்கனீர்கள்.

நீங்கள் சுதந்திரமானவர்களாகிக் காலவமுனிவருக்குத் தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள்.

ஆகவே நீங்கள் ஒன்பது பேரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவுவரை நீங்கள் அந்தத் தொழுநோயால் துயர் அடைவீராக" என்று சாபமிட்டார்.

Tags:    

Similar News