ஆன்மிக களஞ்சியம்

அழகிய சோமாஸ்கந்தர் சிலை

Published On 2023-12-27 12:59 GMT   |   Update On 2023-12-27 12:59 GMT
  • இந்த செப்பு சிலையின் கால்களில் மோதிரங்கள் காணப்படுகின்றன.
  • தலையில் வகிடு எடுத்திருப்பது போல் இந்த சிலையை வார்த்துள்ளனர்.

திருவண்ணாமலை தலத்தில் 2 அடி உயரம் உள்ள சோமாஸ்கந்தர் சிலை அழகான தோற்றத்தில் உள்ளது.

இந்த செப்பு சிலையின் கால்களில் மோதிரங்கள் காணப்படுகின்றன.

தலையில் வகிடு எடுத்திருப்பது போல் இந்த சிலையை வார்த்துள்ளனர்.

இரண்டு கைகளிலும் மலர்களை ஏந்தி இருப்பது போன்று இந்த சிலை வித்தியாசமாக உள்ளது.

3 அடி உயரமுள்ள அம்மன் சிலை, 4 அடி உயரமுள்ள மற்றொரு அம்மன் சிலைகளும் மற்ற ஆலயங்களில் இல்லாதபடி மாறுபட்ட அழகுடன் திகழுகின்றன.

இந்த 2 அம்மன் சிலைகளும் சிரித்த முகத்துடன் இருப்பது பக்தர்களுக்கு பரவசமூட்டும்.

இந்த சிலைகள் 12ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

கார்த்திகை மாத பிரம்மோற்சவம், தை மாத திருவூடல் விழா, பங்குனி உத்திர கல்யாண விழா,

சித்திரை மாத வசந்த உற்சவ விழா, ஊஞ்சல் உற்சவங்கள் மற்றும் மன்மதனை தகனம் செய்யும் விழா

உள்பட பல்வேறு விழாக்களுக்கு இந்த அம்மன் செப்பு சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கந்தசஷ்டி விழாவின் போது மயில் மீது அமர்ந்த ஒரு முருகர் சிலை பயன்படுத்தப்படும்.

இந்த சிலை ஆறு முகங்கள், 12 கரங்கள் கொண்டதாக உள்ளது.

சுமார் 3 அடி உயரமுள்ள சண்முகர் சிலை ஆண்டுக்கு ஒருதடவை தான் வெளியில் வரும்.

இந்த சிலையின் 12 கைகளிலும் வச்சிரம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சக்கரம், சேவல் கொடி, மழு, பாசம்,

அபயம், வரதம் ஆகியவை முறைப்படி காணப்படுகின்றன.

சண்முகப் பெருமானின் இருபக்கமும் வள்ளி&தெய்வாணை நின்ற நிலையில் உள்ளனர்.

வள்ளி காதுகளில் தோடு அணிவிக்கப்பட்டு உள்ளது.

தெய்வாணை அல்லி மலர்களை ஏந்தியபடி நிற்கிறார்.

இந்த செப்பு சிலைகளை பார்க்கும் போது ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருக்கும்.

அந்த அளவுக்கு இந்த செப்பு சிலைகள் அழகாக உள்ளன.

அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள செப்பு சிலைகளில் மிகமிக பழமையானதாக பக்தானுக்கிரக சோமாஸ்கந்தர் சிலை கருதப்படுகிறது.

11ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கிறார்கள்.

இந்த சிலையை ஒருபோதும் எந்த உற்சவ விழாவுக்கும் வெளியில் எடுத்து வருவது இல்லை.

அதுபோன்று பிட்சாடனர் சிலையும் மிகுந்த வேலைபாடுகளுடன் உள்ளது.

இந்த செப்பு சிலை கார்த்திகை விழாவின் போது தங்க வாகனத்தில் எடுத்து வரப்படும்.

சேக்கிழார், தண்டபாணி, பிடாரி, பராசக்தி, பள்ளியறை அம்மன் ஆகியோருக்கும் உற்சவர் செப்பு சிலைகள் உள்ளன.

Tags:    

Similar News