ஆன்மிக களஞ்சியம்

ஆசையை தீர்க்கும் பல்லவ விநாயகர்

Published On 2023-11-22 15:48 IST   |   Update On 2023-11-22 15:48:00 IST
  • ஞாயிறு திருத்தலத்தில் மொத்தம் 4 விநாயகர்கள் இருக்கிறார்கள்.
  • பல்லவ விநாயகர், ஆலயத்தின் உள்ளே சூரியனுக்கு நேரே அமர்ந்துள்ளார்.

ஞாயிறு திருத்தலத்தில் மொத்தம் 4 விநாயகர்கள் இருக்கிறார்கள்.

பல்லவ விநாயகர், துவார கணபதி, நர்த்தண விநாயகர், கமல விநாயகர் ஆகியோரே அந்த 4 விநாயகர்கள் ஆவார்கள்.

இவர்களில் நுழைவு வாயிலில் துவார கணபதி இருக்கிறார்.

கருவறை கோஷ்டத்தில் நர்த்தண விநாயகர் உள்ளார்.

கமல விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

பல்லவ விநாயகர், ஆலயத்தின் உள்ளே சூரியனுக்கு நேரே அமர்ந்துள்ளார்.

பொதுவாக விநாயகர் சிலைகள் தலையில் கிரீடத்துடன் காணப்படும்.

ஆனால் பல்லவ விநாயகர் கிரீடம் இல்லாமல் இருக்கிறார்.

தனது தந்தையான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

எனவே இவரை பல்லவ விநாயகர் என்றே அழைக்கிறார்கள்.

இவரை வழிபட்டால் பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை குறையும்.

சிலர் எப்போதும் பதவி பதவி என்று ஆசையோடு அலைவார்கள்.

இவரை வழிபட்டால் அந்த பதவி ஆசையும் நிவர்த்தி ஆகும்.

பொருள், பதவி ஆகியவற்றின் மீதுள்ள மோகத்தை குறைப்பதால் இவர் முக்திக்கு வழிகாட்டும் முதல் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.

Tags:    

Similar News