ஆன்மிக களஞ்சியம்

எளிய தர்ப்பண பூஜை முறைகள்

Published On 2023-06-13 07:11 GMT   |   Update On 2023-06-13 07:11 GMT
  • பிரபஞ்சமெங்கும் பல பிறவிகளுடன் வாழும் தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர்.
  • நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது.

தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கேற்ப பிசாசு, பேய் போன்ற ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம். கோடானு கோடி விண்ணுலகக் கோளங்களில் எங்கு வேண்டுமானாலும் இருக்கக் கூடும்.

மக்களுக்குத் தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ரு லோகம் போன்ற நல்ல லோகங்களை அடைந்து மீண்டும் அங்கு இறைச் சேவையைத் தொடர்கின்றனர். அங்கிருந்தவாறே பிரபஞ்சமெங்கும் பல பிறவிகளுடன் வாழும் தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர்.

நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் தவறாது நிறைவேற்றிட, அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.

Tags:    

Similar News