ஆன்மிக களஞ்சியம்

ஆதிகாமாட்சி அமைந்த விதம்!

Published On 2023-09-25 10:39 GMT   |   Update On 2023-09-25 10:39 GMT
  • இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
  • ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரத்தின் காரணத்தால் அக்னியின் ஆவேசம் படிப்படியாகக் குறைந்து வந்தது.

இருந்த போதிலும் மக்கள் அம்மனை தரிசிக்கவும் ஆலயத்தில் பிரவேசிக்கவும் அஞ்சினர்.

அந்த அச்சத்திற்குக் காரணமாய் இருந்தது அங்கிருந்த தவக் காமாட்சி விக்ரகமேயாகும்.

இதனால் பல ஆண்டு காலம் அம்மன் சன்னிதானம் பிரசித்தியடையாமலேயே இருந்து வந்தது.

ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மிகவும் பிரபலமாகி பக்தர்கள் பலகோடி சென்று வருவதற்கும் காரணம் இருக்கின்றது.

ஆதிசங்கரர் வழி வந்த காஞ்சிப் பெரியவர்கள் தன் ஞானத்தால் மக்கள் அங்கு அதிகமாய் செல்லாததின் காரணத்தைக் கண்டு அதையறிந்து மாங்காடு சென்றார்.

தான் அறிந்ததை நடைமுறைப்படுத்தினார்.

அதாவது தவக் கோலத்தில் இருந்த காமாட்சியை மூலஸ்தானத்திலிருந்து எடுத்து அதை அக்கோவிலின் இடது புறத்தில் வைத்தார்.

பின்னர் மூலஸ்தானத்தில் ஓர்கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும் கூடிய சாந்தமான காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.

இதனால் மாங்காடு மூலஸ்தான அம்மன் "ஆதி காமாட்சி" என்று விளங்குகிறார்.

இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.

ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்றவை மாங்காட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Tags:    

Similar News