என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வைகுண்ட பதவி தரும் ஏகாதசி தோன்றிய கதை
    X

    வைகுண்ட பதவி தரும் ஏகாதசி தோன்றிய கதை

    • மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.
    • மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.

    வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி.

    ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

    கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான்.

    தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

    முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

    அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.

    பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக் கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

    அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள்.

    பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், "ஹூம்்" என்று ஓர் ஒலி எழுப்பினாள்.

    அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

    ஏகாதசி

    அதே நேரத்தில் ஏதுமறியாதவர் போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட

    சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி,

    "ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும்

    அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்" என்று அருளினார்.

    Next Story
    ×