search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவானைக்காவல் ஆலய தீர்த்த சிறப்பு
    X

    திருவானைக்காவல் ஆலய தீர்த்த சிறப்பு

    • பிரமதீர்த்தம்:இது தெற்கு நான்காம் திருச்சுற்றின் சாலைக்குத் தென்புறம் உள்ளது.
    • ஸ்ரீமத் தீர்த்தம்: இது கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகில் லிங்கத்துக்கு சிறு ஊற்றுக்கண் போல் உள்ளது.

    1.பிரமதீர்த்தம்:இது தெற்கு நான்காம் திருச்சுற்றின் சாலைக்குத் தென்புறம் உள்ளது.

    2.இந்திரதீர்த்தம்: இது மூன்றாம் திருச்சுற்றில் தென் மேற்கில் காசி விசுவநாதர் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ளது.

    3. சம்பு தீர்த்தம்:இது மூன்றாம் திருச்சுற்றுக்கும் கிழக்கில் பழைய சம்புகேசுவரர் கோவிலுக்கும் பக்கத்தில் உள்ளது.

    4. ராமதீர்த்தம்:இது அயந்தாம் திருச்சுற்றுக்கு வெளியே சந்நிதிக்கு மேற்கில் உள்ள தெப்பக்குளம். தை மாதத்தில் தை தெப்பம் நடைபெறும்.

    5. ஸ்ரீமத் தீர்த்தம்: இது கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகில் லிங்கத்துக்கு சிறு ஊற்றுக்கண் போல் உள்ளது.

    6. அக்னி தீர்த்தம்: இது மூன்றாம் பிரகாரத்தில் தென் கிழக்கில் வசந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் உள்ள பெரிய கிணறாகும்.

    7. அகத்திய தீர்த்தம்:இது அம்மன் கோவிலில் முதல் சுற்றில் சந்நிதிக்கு எதிரில் பள்ளி அறைக்குப்பக்கத்தில் உள்ள சிறிய கிணறாகும்.

    8.சோமதீர்த்தம்:இது திருவரங்கத்தில் உள்ள சந்திரபுட்கரணி என்று சொல்லப்படுகிறது.

    9.சூரியதீர்த்தம்:இது நான்காம் திருச்சுற்றில் தென் மேற்கு மூலையில் ஆயிரக்கால் மண்டபத்திற்கு எதிரில் உள்ள தெப்பகுளம் ஆகும்.

    இதைச்சுற்றிலும் சுமார் நூறுகால்களைக் கொண்ட இரண்டடுக்கு வரிசை மண்டபம் உள்ளது.

    இதில் ஆடி மாதத்தில் பூரநட்சத்திரத்தில் தெப்பதிருவிழா நடைபெறும்.

    Next Story
    ×