search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருப்பதியில் தினமும் நடக்கும் சிறப்பு பூஜைகள்
    X

    திருப்பதியில் தினமும் நடக்கும் சிறப்பு பூஜைகள்

    • திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் சுப்ரபாதத்துடன் தான் பொழுது தொடங்குகிறது.
    • இந்தக் கணக்கைப் பார்த்த பின்னர் பெருமாள் கருவறைக்குச் சென்று விடுகிறார்.

    திருப்பதி கோவிலில் ஒவ்வொரு நாளும் சுப்ரபாதத்துடன் தான் பொழுது தொடங்குகிறது.

    அரிதுயில் கொண்டிருக்கும் போக ஸ்ரீநிவாசரை பள்ளியறையில் அர்ச்சகர்கள் தீப ஒளியேற்றி தங்கக் கதவுகளை மூடிக் கொண்டு சுப்ரபாதம் பாடித் துயில் எழுப்புகிறார்கள்.

    அவருக்கு ஆரத்தி எடுத்து, பாலும் வெண்ணையும் நிவேதனம் செய்கிறார்கள்.

    சமஸ்கிருதத்தில் உள்ள சுலோகங்களைப் பாடிய பிறகு கதவுகள் திறக்கப் பெறுகின்றன.

    இந்த சுப்ரபாதம் அதிகாலை 3.15 மணிக்கு முடிவடைகிறது.

    அதன் பின்னர், வெங்கடேச பெருமான் பக்ததர்களுக்கு விஸ்வரூப சேவை சாதிக்கிறார்.

    விஸ்வரூப சேவைக்குப் பிறகு பெருமாளின் கர்ப்ப கிருகத்திலிருந்து முந்தைய தினத்தில் அணிவிக்கப்பட்ட மலர்மாலைகள் அகற்றப்படுகின்றன. இதையே தோமல சேவை என்கிறார்கள்.

    தோமல சேவையின்போது போக ஸ்ரீநிவாசருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்பு ஆகாய கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்திலிருந்து பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்தத் தீர்த்தம் கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமலை நம்பியின் வழித் தோன்றல்களால் கொண்டு வரப்படுகிறது.

    மூலவருக்கு பாதுகாபிஷேகம் மட்டுமே செய்து, பின்னர் மணம் நிறைந்த மலர்களாலும், பூமாலைகளாலும் அலங்காரம் செய்கின்றனர்.

    தோமல சேவைக்குப் பின்னர் 'கொலுவூ' என்ற தர்பார் நடைபெறுகிறது.

    இதன் போது தங்கக் கதவுகளைத் திறந்து, அந்த அறையிலிருந்து ஸ்ரீநிவாசமூர்த்தியை வெளியே அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

    வெள்ளிக்குடை பிடித்து, வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்த்தி, ஸ்ரீநிவாசனை திருமாமணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கச் செய்கின்றனர்.

    பெருமாளின் முன்னிலையிலே சேவார்ததிகளால் அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் பற்றிய

    விவரங்களும், முந்தைய நாள் வரவு செலவுக் கணக்குகளும் அவரது திருமுன் படிக்கப்படுகின்றன.

    பின்பு வரவு வந்த பண நோட்டுகளும், நகைகளும், நாணயங்களும் அவர் முன்பு பிரித்து வைக்கப்படுகின்றன.

    இந்தக் கணக்கைப் பார்த்த பின்னர் பெருமாள் கருவறைக்குச் சென்று விடுகிறார்.

    Next Story
    ×