search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமணத்தடை நீக்கும் தாத்ரீஸ்வரர்
    X

    திருமணத்தடை நீக்கும் தாத்ரீஸ்வரர்

    • பூங்குழலி அன்னைக்கு பச்சை வஸ்திரம் வளையல்கள் அணிவித்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.
    • ஏழை-எளியவர்களுக்கு தானம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    இந்த ஊரில் சிவாலயமும், விஷ்ணு தலமும் அருகருகே அமைந்திருப்பதால் மேலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தலமாக சித்தர் காடு - திருமணம் ஊர் திகழ்கிறது.

    குறிப்பாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திர நாளில் இத்தலத்துக்கு வந்து குபேரனுக்கு

    நெல்லிகாய் ஊறுகாயுடன் தயிர் சாதம், புளியோதரை படைத்து வழிபட்டு, அதை ஏழை-எளியவர்களுக்கு

    தானம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    திருமணத் தடையால் வேதனையில் இருப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து நெல்லியப்பருக்கு நெல்லிச்சாறு,

    நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பூங்குழலி அன்னைக்கு பச்சை வஸ்திரம், வளையல்கள்

    அணிவித்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    சித்தர்களே இந்த பரிகார வழிபாடுகளை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

    அதனாலேயே இந்த ஊருக்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

    படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர்.

    அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர்.

    சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

    சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது.

    சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக் காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.

    Next Story
    ×