என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுமா?
    X

    திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுமா?

    • விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.
    • இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். பிள்ளைச் செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாக காட்சி தருவார்.

    ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் ஏகாதசி அன்று மட்டும் இந்த தரிசனத்தை காணப்பெற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி!

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ளது.

    இத்தல விநாயகருக்கு திருவலஞ்சுழி வெள்ளை வாரணர் கோவில் கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு.

    இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். பிள்ளைச் செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நாற் சந்தியில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் ஸ்ரீ பெருநாட்டு பிள்ளையார்.

    இக்கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும்.

    இந்த கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான்.

    அதைக்காண தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமண விலேஷம் என்று அனைத்து வேண்டுதல்களுக்கும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் செவிசாய்த்து பெருநாட்டுப் பிள்ளையார் நிறைவேற்றி தருகிறார்.

    Next Story
    ×