search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தஞ்சையில் கற்கோவில் காவியமாக விளங்கும் பெரிய கோவில்
    X

    தஞ்சையில் கற்கோவில் காவியமாக விளங்கும் பெரிய கோவில்

    • காலத்தால் மறக்க முடியாத கோவிலாக பெரிய கோவில் திகழ்ந்து வருகிறது.
    • இதனால் 1004-ல் தொடங்கிய பெரிய கோவில் கட்டுமான பணிகள் 1010-ல் முடிக்கப்பட்டது.

    மாமன்னன் ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெரிய கோவிலின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

    காலத்தால் மறக்க முடியாத கோவிலாக பெரிய கோவில் திகழ்ந்து வருகிறது.

    தஞ்சை நகரில் மலைப்பகுதிகளே இல்லாத போதிலும் பல்வேறு கட்ட மண் பரிசோதனையின் மூலம் செம்பாறாங்கல் என்னும் பாறைவகை பூமிக்கடியில் உள்ளதை சோழர் காலப் புவியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இவ்வாறு பூமிக்கு அடியில் இயற்கையாக அமைந்துள்ள செம்பாறாங்கல் தட்டுகள், பெரியகோவிலுக்கு இயற்கையானதும், உறுதியானதுமான ஒரு அஸ்திவாரத்தை ஏற்படுத்தி தரும் என்பதையும், கட்டுமானத்தின் முழு எடையையும் தாங்கும் வலிமையுடன் விளங்கும் என்பதையும் அழைத்துள்ளனர்.

    அதன் அடிப்படையிலேயே சோழர்கால ஸ்தபதிகள் முழுவதும் கற்பாலங்களைக் கொண்டு சிற்ப சாஸ்திர நூல்கள் வரையறுத்துள்ள அதிகபட்ச அளவு விகிதங்களை பின்பற்றி மிக உயரமானதாகவும், பிரம்மாண்டமாகவும் பெரிய கோவிலை கட்ட தீர்மானித்தனர்.

    அதனால்தான் ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கும் அதிகமான எடையும், 216 அடி உயரமும் கொண்ட முற்றிலும் கருங்கல்லால் ஆன விமானத்தை அமைத்திட 4 முதல் 6 அடி அஸ்திவாரம் மட்டுமே பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் கிளை நதிகளும், வாய்க்கால்களும் பெரிய கோவில் கட்டும் பணிகளுக்கான கட்டுமான பொருட்களை மலைப்பகுதிகளில் இருந்து கோவில் வளாகம் வரை கொண்டு வந்து சேர்க்கும் நீர்வழிப் பாதைகளாக பயன்படுத்தப்பட்டன.

    இதனால் 1004-ம் ஆண்டு தொடங்கிய பெரிய கோவில் கட்டுமான பணிகள் 1010-ல் முடிக்கப்பட்டது.

    மலைகள் இல்லாத தஞ்சையில் மாபெரும் கற்கோவிலாக தஞ்சை பெரிய கோவில் விளங்குவது எவ்வளவு பெரிய ஆச்சரியம், அதிசயம்.

    மாமன்னன் ராஜராஜசோழனின் கலை வண்ணத்தில் உருவான பெரிய கோவில் காலமெல்லாம் அவர் புகழ் பரப்பும் கருங்கல் காவியமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

    Next Story
    ×