என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சொர்க்க வாசல்
    X

    சொர்க்க வாசல்

    • இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.
    • பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

    இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.

    முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார்.

    அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டு விடும் படியும்,

    அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார்.

    அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

    மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார்.

    அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு,

    'பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்' என்று வேண்டினார்கள்.

    பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார்.

    பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.

    மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார்.

    அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே,

    தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று,

    தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்

    அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல்

    வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும் என்று வரம் கேட்டனர்.

    பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

    Next Story
    ×