என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சூரியன்-காரகத்துவம்
- ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.
- ஜோதிடத்தில் “கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள்.
காரகத்துவம் என்றால் அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள், அவருடைய சுபாவம், நேச்சர் என்றும் கூறலாம், கேரக்டர் என்றும் கூறலாம்.
சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று சொல்வோம்.
ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.
சூரியனைக் கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.
சூரிய தசா
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும்.
சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள்.
தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.
இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும்.
மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும்.
ஜோதிடத்தில் "கர்ப்பச்செல்" என்று குறிப்பிடுவார்கள்.
சூரிய தசையில் சூரியன்-காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ அடிப்படையில், சூரியன் தரும் பலன்களும் நடைபெறும்.
இனி ஜோதிட ரீதியாக சூரியனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.






