search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சூரிய தரிசனம் விலக்கப்பட்ட நேரங்கள்
    X

    சூரிய தரிசனம் விலக்கப்பட்ட நேரங்கள்

    • காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும், வணங்குவதற்கும் பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கின்றது.
    • மிகப் பண்டைக்காலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஒன்றுதான் சூரியன்.

    காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும், வணங்குவதற்கும் பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கின்றது.

    மாலை வேளையில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்று ஒரு மூதுரை உண்டு.

    ஆனால் சூரியனை பார்க்க கூடாத, விலக்கப்பட்ட நேரங்களைப் பற்றியும் ஆசாரியர்கள் போதித்துள்ளனர்.

    "சூரியனென்றொரு நட்சத்திரம் பூமியென்றொரு கோணம்" என்று பண்டைக்காலத்தவர் கூறியதுண்டு.

    இது பிரபஞ்ச கோடியின் சாஸ்திர அறிவியலின் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவது.

    விண்வெளியில் அளவிட முடியாத வண்ணம் உலாவும் சூரியனென்ற அற்புதத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் நாம் கேட்டிருப்போம்.

    மிகப் பண்டைக்காலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஒன்றுதான் சூரியன்.

    இதற்கு உதாரணமாக விளங்குகின்றது ஒரிசா மாநிலத்தில் கொனார்க்கில் சூரியன் கோவில்.

    பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொள்ளும் சூரியன் மிக மிக வெப்பமானது.

    Next Story
    ×