search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சீதா சமேத சொர்ண கல்யாணராமர்
    X

    சீதா சமேத சொர்ண கல்யாணராமர்

    • அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.
    • முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில் இடது பக்கம் சீதா சமேத சொர்ண கல்யாணராமர் ஆலயம் உள்ளது.

    இது சமீபத்தில் உருவான ஆலயம்தான்.

    ஆனால் இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் முற்பட்டவை.

    கடந்த 2002-ம் ஆண்டு ஞாயிறு கிராமத்தில் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பள்ளம் தோண்டினார்கள்.

    அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.

    அந்த சிலைகளை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்தன.

    குறிப்பாக சக்கரத்தாழ்வார் சிலை சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்தது.

    முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.

    இந்த சக்கரத்தாழ்வார் சிலையின் ஒரு பக்கத்தில் சுதர்சனரும், பின்பக்கத்தில் யோக நரசிம்மரும் வீற்றுள்ளனர்.

    இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் "இத்தலத்தில் சுதர்சன ஹோமம்" நடத்தப்படுகிறது.

    காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த சுதர்சன ஹோமம் நடைபெறும்.

    பக்தர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்கலாம்.

    வசதி உள்ளவர்கள் சுதர்சன ஹோமத்திற்கு நெய், பால், தயிர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

    சுதர்சன ஹோமம் செய்தாலோ அல்லது பங்கேற்றாலோ ராகு-கேது தோஷம் உடனே விலகி விடும்.

    இத்தலத்து ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

    ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான், சூரியனை வழிபட்ட பிறகு மறக்காமல் அருகில் உள்ள சீதா சமேத கல்யாணராமரையும் வழிபடவும்.

    மனதுக்கு அமைதி கிடைக்கும்.

    Next Story
    ×