search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பஞ்ச கிருத்தியங்கள்
    X

    பஞ்ச கிருத்தியங்கள்

    • தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.
    • அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.

    அண்ட சராசரங்களின் இயக்கங்கள் யாவும் ஆடல்வல்லான் என்றழைக்கப்படும் நடராஜப் பெருமானின் திரு நடனமே.

    தாண்டவ மூர்த்தி என்றே இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இவரது தாண்டவங்கள் பல.

    தாண்டவ மூர்த்தியான நடராஜப் பெருமானின் திருவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

    விரிந்து படர்ந்த திருச்சடை, நான்கு திருக் கரங்கள், வலது மேற் கையில் டமருகம் எனப்படும் உடுக்கை, இடது மேற்கையில் எரியும் நெருப்பு, வலது கீழ்க் கை அபய முத்திரை, இடது கீழ்க்கை தூக்கிய திருவடியை காட்டியவாறு உருவகிக்கப்பட்டுள்ளது.

    இடது காலைத் தூக்கி, வலது காலை ஊன்றி, அதன் கீழ் முயலகன் என்னும் அசுரனை மிதித்தபடி காணப்படுகிறார்.

    இப்பெருமானுக்கு கால்கள் இரண்டு என்றாலும் எண்ணற்ற கைகள் உடையவராக ஆகமங்களில் கூறப்பட்டுள்ளார்.

    51 அட்சரங்களே திருவாசியாகவும், திருவைந் தெழுந்தான பஞ்சாட்சரமே திருவுருவாகவும், பராசக்தியே திருச்சிற்றம்பலமாகவும் விளங்குகின்றன.

    உடுக்கை சிருஷ்டி என்ற படைத்தலையும் எரிகின்ற நெருப்பு சம்ஹாரம் என்ற அழித்தலையும், அபயகரம் அருளுதலையும், ஊன்றிய திருவடி மறைத் தலையம், குஞ்சித பாதம் என்ற தூக்கிய திருவடி காத்தலையும் தத்துவார்த்தமாகக் குறிக்கின்றன.

    இவரே ஐந்தொழில்களையும் செய்யும் தாண்டவ பெருமானாக விளங்குகிறார்.

    இந்த ஐந்தொழில்களையே 'பஞ்ச கிருத்தியங்கள்' என்றழைப்பர்.

    அதாவது சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுகிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்கள் ஆகும்.

    இந்தப் பஞ்சக் கிருத்தியங்களையும், நமசிவாய என்னும் ஐந்து எழுத்துக்களையும் ரூபமாகக் கொண்டு இவ்வுலக உயிர்களுக்கு அருள்கின்றார்.

    நமசிவாய என்பதில் இறைவனின் திருவடி நகார அட்சரமாகவும், வயிறு மகா அட்சரமாகவும், தோல் சிகார அட்சரமாகவம், திருமுகம் வகார அட்சரமாகவும், திருவடி யகார அட்சரமாகவும் சேர்ந்து 'நமசிவாய' என்னும் ரூபாமாய்த் திகழ்கிறது.

    Next Story
    ×