search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நடராஜர் சிவகாமி அம்பாள் திருமணம்
    X

    நடராஜர் சிவகாமி அம்பாள் திருமணம்

    • திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
    • இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.

    ஆடல் வல்லானை நமசிவாய என்னும் ஐந்தெழுத்தால் வணங்க எல்லா வல்லமைகளும், யோக சித்திகளும் கைவரப் பெறும்.

    இந்த அருட்சக்தி 'சர்வாதம் யோகப் பிரதாயினி' என்று ரிஷிகளால் கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்புடைய நடராஜருக்கு சென்னைக்கு மேற்கே 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் 'சித்துக்காடு' என்ற சிவத்தலத்தில் ஆருத்ரா அன்று திருமண வைபவம் நடப்பது, வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத சிறப்பு.

    பொதுவாக சிவாலயங்களில் நடராஜர், உற்சவராக இருப்பதையும் அவருக்கு ஆருத்ரா தரிசனம் நடப்பதையும்தான் எல்லோரும் அறிவார்கள்.

    மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர ஆருத்ரா விழாவின் முதல் இரவில் நடராஜர், சிவகாமி அம்மையார் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு இரவு 10 மணியில் இருந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    இதன் பின்னர் மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளாக நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் திருமண வைபவம் மாணிக்கவாசகர் முன்னிலையில் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றது.

    இதன்பின் இம்மூவரும் வீதிஉலா வருவார்கள்.

    பிறகு காலை 10 மணியளவில் ராஜகோபுரம் முன்பாக திருவெம்பாவைப் பாடல்கள் பாடப் பெற்று, மூன்று முறை பார்வேட்டை நடைபெறும்.

    இவ்விழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    இத்தகைய திருமணமும் விழாவும் வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு ஆகும்.

    இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் முகப்பு மண்டபத்தூணில் புடைப்புச் சிற்பமாக 'கருடக் கொடி சித்தர்' எழுந்தருளியுள்ளார்!

    இவர் கண் கோளாறுகளை நீக்க வல்லவர் என்பது ஐதீகம்! எனவே இவரை வழிபட எண்ணற்ற பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இத்தலத்தில் இருக்கும் அம்பாளுக்குப் பூங்குழலி அம்மன் என்று பெயர்.

    இந்த அன்னைக்கு குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்துவழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும்.

    சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி ஆருத்ரா, ஆவணி, புரட்டாசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண் டுக்கு ஆறுமுறை நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகம் இத்தலத்தில் நடை பெறுகின்றது.

    மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும்.

    திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    இந்த திருமணத்தைக் கண்டவர் களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.

    Next Story
    ×