search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கோவிலில் செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்...
    X

    கோவிலில் செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்...

    • ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.
    • துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

    ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.

    ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும்.

    அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை.

    கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது.

    பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.

    கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும்.

    இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

    பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும்.

    அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசுதல் வேண்டும்.

    கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும்.

    சிவபுராணத்தை அல்லது இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது நல்லது.

    முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும்.

    இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும்.

    மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.

    சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம்.

    இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

    இது பொதுவான, முறைப்படியான ஆலய தரிசனமாகும்.

    இவை தவிர ரிஷிகளும், முனிவர்களும், நமது முன்னோர்களும் ஆலயங்களில் செய்யத் தக்கவை, தகாதவை என்று பல்வேறு தரிசன விதிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×