search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஞாயிறு கோவில் பயனுள்ள தகவல்கள்-25
    X

    ஞாயிறு கோவில் பயனுள்ள தகவல்கள்-25

    • ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

    ஞாயிறு கோவில் பற்றிய 25 பயனுள்ள தகவல்கள்

    1.ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    செங்குன்றத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

    2. சோழ மன்னர் கட்டிய இந்த கோவிலில் பல்லவ மன்னர்கள், சேர அரசர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர்.

    3. இத்தலத்து ஈசன் தாமரைப்பூவில் இருந்து தோன்றியவர் என்பதால் புஷ்பரதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    4. இத்தலத்தில் 14 செப்பு திருமேனிகள் உள்ளன.

    அவை அனைத்தும் சோழர் கால படைப்புகளாகும்.

    ஆலயத்தில் தனி அறையில் இந்த செப்பு சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    5. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

    6. இங்குள்ள சூரிய பகவானுக்கு கோதுமை பொங்கல் அல்லது கோதுமை பாயாசம் படைத்து வழிபட்டால்

    கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் ஊடல்கள் தீரும்.

    பிரிந்து போன தம்பதிகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் ஆற்றலும் இத்தலத்துக்கு உண்டு.

    7. வேண்டுதல் நிறைவேறிய பிறகு இத்தலத்துக்கு வந்து சூரிய பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபாடு செய்கிறார்கள்.

    8. இத்தலத்தின் தலமரமாக நாகலிங்க மரம் உள்ளது. தல புஷ்பமாக செந்தாமரை மலர் போற்றப்படுகிறது.

    9. இத்தலத்துக்கு செல்லும் போது, பஞ்சேஷ்டி, ஆண்டார் குப்பம், சிறுவாபுரி ஆகிய இடங்களுக்கும் சென்று வரும்

    வகையில் பயணத்தை அமைத்துக் கொண்டால், அன்றைய தினம் மிகச்சிறந்த ஆன்மிக பயண தினமாக அமையும்.

    10. ஞாயிறு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஒரு காலத்தில் செல்வ வளம் பெற்று திகழ்ந்தன.

    இதனால் அந்த பகுதி, 'ஞாயிறு நாடு' என்று பெயர் பெற்றிருந்தது.

    11. மூர்ததி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளும் ஒருங்கிணைந்த தலமாக ஞாயிறு தலம் உள்ளது.

    12. கருவறையில் மூலவர் புஷ்பரதேஸ்வர் பஞ்சாசனத்தில் அமர்ந்துள்ளார்.

    இவர் சுயம்புவாக தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    13. சித்திரை மாதம் 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை ஈசன் மீதும் அம்பிகை மீதும் சூரிய ஒளிவிழும்.

    தமிழ்ப்புத்தாண்டை சூரிய பகவான் இத்தலத்து ஈசன் காலடியில் பட்டு ஆசி வாங்கி தொடங்குவதாக ஐதீகம்.

    சூரியனின் இந்த வழிப்பாட்டை அந்த 5 நாட்களும் காலை 6.10 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் காணலாம்.

    14. இத்தலம், கண்நோய், சூரியப்புத்தி தோஷம், பித்ரு சாபம் ஆகிய மூன்றையும் தீர்ப்பதில் புகழ் பெற்றது.

    15. சங்கிலி நாச்சியாருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    அமாவாசை தினத்தன்று இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    16. இத்தலத்துக்கு விருட்சமான நாகலிங்க மரம் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாகலிங்க மரத்தில் தொட்டில் கட்டி தொங்க விடுவதுண்டு.

    17. தல விருட்சமான நாகலிங்க மரம் அருகே மூன்று நாகர்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    திருமண தடையால் தவிக்கும் இளம் பெண்கள், அந்த நாகர் சிலைகளை சுற்றி மஞ்சள் கிழங்கு சேர்த்து, மஞ்சள் கயிற்றை சுற்றி கட்டினால் உடனடியாக பலன் கிடைக்கிறது.

    18. ஞாயிறு தலத்தில் தினமும் சிவாகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.

    19. ஆவணி மாதம் சூரிய பகவானுக்கு இத்தலத்தில் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

    20. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை புஷ்பரமேஸ்வரருக்கு ருத்ர ஹோமம், ஏசதின லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.

    21. புராதன பழமை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் உள்ளது.

    இது உண்மையிலேயே மிகப்பெரும் குறையாகும்.

    பக்தர்கள் முன் வந்து ஒத்துழைப்புக் கொடுத்தால் ஆண்டுதோறும் ஜாம்... ஜாம்... என்று பிரம்மோற்சவம் நடத்தலாம்.

    22. ஞாயிறு ஆலயத்தில் வாகனங்கள் ஒன்று கூட இல்லாதது பெரும் குறையாகும்.

    வசதி வாய்ப்புள்ள பக்தர்கள் தங்களால் இயன்ற வாகனங்களை செய்து ஆலயத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தால் பெரும் புண்ணியம் வந்து சேரும்.

    23. ஞாயிறு ஆலய கருவறை விமானம் 'அஷ்டாங்க விமானம்' என்ற முறைப்படி கட்டப்பட்டுள்ளது.

    மிக, மிக பழமையான ஆலயங்களில் மட்டுமே இத்தகைய அஷ்டாங்க விமான அமைப்பை காண முடியும்.

    24. தினமும் இந்த தலத்தில் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.

    காலை 8 மணிக்கு ஒரு தடவையும், மாலை 6 மணிக்கு மற்றொரு தடவையும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    25. ஞாயிறு கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.

    Next Story
    ×