என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

எண்ணெய் சேமிக்கும் தாழி
- அந்த எண்ணெய்யை ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள்.
- இதுபோல பல தாழிகள் இந்த ஆலயத்தில் இருந்ததாக தெரிகிறது.
ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்துக்கு சென்றால் சுற்று பிரகாரத்தில்,
திருக்குளத்துக்கு செல்லும் வழியில் மிகப்பெரிய பானை ஒன்று இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த தாழி தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் ஞாயிறு ஊரிலும், அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் ஏராளமான இலுப்பை மரங்கள் இருந்தன.
அந்த மரங்களில் இருந்து எண்ணெய் கிடைத்தது.
அந்த எண்ணெய்யை ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள்.
இலுப்பை எண்ணெய்யை ஆலயத்தில் சேமித்து வைப்பதற்காக இந்த பெரிய தாழி (பானை)யை நம் முன்னோர் உருவாக்கி இருந்தார்கள்.
இதுபோல பல தாழிகள் இந்த ஆலயத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்த ஒரு பெரிய பானையே மிஞ்சி உள்ளது.
இவ்வளவு பெரிய பானையில் இலுப்பை எண்ணெய்யை நம் முன்னோர்கள் சேமித்து வந்ததைப் பார்க்கும்போது,
ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயம், எவ்வளவு பெரிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது






