search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரமாண்ட திருப்பதி ஏழுமலையான் சிலை
    X

    பிரமாண்ட திருப்பதி ஏழுமலையான் சிலை

    • பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது.
    • திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும்.

    திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும்.

    9 அடி உயரத்துடன் அழகாக காட்சி அளிக்கும் ஏழுமலையானை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே வராது.

    அதிலும் அவருக்கு அனைத்து நகைகளையும் அணிவித்து அலங்காரம் செய்த பிறகு பார்த்தால் பரவசமாக இருக்கும்.

    திருமலை தெய்வம் வேங்கடாஜலபதிக்கு, உச்சி முதல் பாதம் வரை அங்கம் முழுக்க ஆபரணங்கள், தண்டை,

    பாடகம், சூரிய கடாரி, நாகாபரணம், கர்ணபத்திரம், திருநெற்றிப் பட்டம், காசுமாலை என

    அங்கமெல்லாம் தங்கம் அணிந்து அழகே உருவாகக் காட்சி அளிக்கிறார்.

    கமல பீடத்தின் மீது பாதம் ஊன்றி, நவரத்னங்களாலான அணிகள் பூண்டு, சுவர்ண மகுடம் தரித்து

    மகர குண்டலங்கள் செவி அணி ஆக, மகர கண்டி, நாகாபரணம் 108 லட்சுமிகள் பொறித்த மாலை,

    தங்கப்பூணூல் தரித்து ஏழுமலையான் நமக்கு அருள்பாலிக்கிறார்.

    பத்து ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஏற்று ஷேத்ரய்யா, தியாகய்யா, புரந்தர தாசர், அன்னமாச்சார்யா சாகித்ய

    கர்த்தாக்களின் சங்கீதம் கேட்டு மலையே குனிய நின்று கொண்டு இருக்கிறார் வேங்கடவன்.

    கண்களையே மறைத்துவிடும் திருமண் என்ற நாமம் அணிவிக்கப்படுகிறது.

    இதில் முழுப்பங்கு பச்சைக் கற்பூரம்.

    இதைச் சாத்துவது வெள்ளிக்கிழமை, வேங்கடமுடையானுக்கு அபிஷேகமும், வெள்ளிக்கிழமையில்தான் நடத்தப்படுகிறது.

    இதிலும் ஒரு வினோதம் உள்ளது.

    அபிஷேகப் பொருட்களில் மஞ்சளும் இடம் பெறும்.

    இத்தகைய சிறப்புகள் கொண்ட ஏழுமலையான் சிலை முதலில் இரண்டு கரத்துடன்தான் இருந்தது என்றும்,

    பின்னர் உடையவர் ராமானுஜர் வேண்டுதல் செய்தபடி பெருமாள் சங்கு சக்கரங்களை ஏந்திய இரண்டு கரங்களுடன்

    நான்கு கரத்தவராக சேவை சாதித்ததாகவும் சொல்கிறார்கள்.

    பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது.

    இந்த சக்கரம் அவரது வலது கையில் இருக்கிறது.

    இடது கையில் உள்ளது சங்கு.

    அதர்மத்தை அழித்து எழும் சங்கின் ஒலி இதன் தத்துவமாகும்.

    Next Story
    ×