search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அஸ்வதன விருட்ச கணேசரின் வழிபாட்டு சுலோகம்
    X

    அஸ்வதன விருட்ச கணேசரின் வழிபாட்டு சுலோகம்

    • அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் “எட்டு இலை”களால் ஆனது.
    • இவரை வணங்குவதால் ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.

    அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் "எட்டு இலை"களால் ஆனது. அதாவது

    * நேத்ர மென்னும் கண்களின் மேல் பகுதியில் சூலமும், காதுகளில் குண்டலமும், வலது கரத்தில் "ஓம்" என்கிற பிரணவ மூல எழுத்தும், இடது கரத்தில் சுழல்கின்ற இந்தப் பூமியில் சமத்துவக் குறியீடான ஸ்வஸ்திக்கு இருக்கின்றது.

    * வயிற்றில் அரவமென்னும் பாம்பினை போன்ற முப்புரிநூல் இச்சா, ஞான, கிரியா சக்திகளையும், ஞானம், செல்வம், வீரம் ஆகிய பேறுகளையும் அளிப்பதாக விளங்குகின்றது.

    * நீலநிற இரு தந்தங்களும் தோஷங்களை விலக்குகின்ற தன்மையுடையதாகவும், எட்டு தனங்களும் மனிதனுக்குரிய நல்ல குணங்களை குறிப்பனவாகவும் உள்ளன.

    *அஸ்வதன விநாயகருடைய தன மென்கிற இலைப்பகுதிகளில் அரச மரத்தில் பல தெய்வங்கள் இருப்பதைப் போலவே பிரம்ம ருத்திரர்கள், திக்கஜங்கள், நட்சத்திராதி தேவதைகள் வசிக்கிறார்கள்.

    இவரை வணங்குவதால் பிள்ளைக்கனி தீர்வதோடு ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.

    மேலும்,

    "அஷ்டதன மத்யே கணேசம்

    சாந்தரூபம்

    மதத்ரி ணேத்ரம்

    நாகா பரண புஷிதம்

    த்ரி சூல பாணினம், கிரீட

    மகுட தாரினம்

    சர்வ சித்திரப்ரதம் அஸ்வ

    தன கணேசம் பஜே"

    இதுவே அஸ்வதன விருட்ச கணேசரின் வழிபாட்டு சுலோகம்.

    இதன் பொருள் எட்டுதனங்களை கொண்டவரும், அமைதியான உருவத்தை உடையவரும் யானையின்

    மூன்று கண்களைப் போன்ற சிறு கண்களைக் கொண்டு ஆர்ப்பவரும், பல ஆபரணங்களைச் சூடியவரும்,

    மிகவும் தூய்மையான, வெள்ளைப் பூணூலை அணிந்து கொண்டிருப்பவரும், முகத்தின் நடுப்பகுதியில்

    சக்தி வடிவமானவரும், சிவபெருமானுடைய ஆயுதமான த்ரி சூலாயுதத்தை திலகமாக பொருத்தி இருப்பவரும்,

    தலையிலுள்ள சிகைப் பகுதிகள் கிரீட மகுடத்தை அணிந்திருப்பவரும் இந்த சாந்தரூபமான அரச இலைகளால்

    அமைந்து அருள் தருபவரான அஸ்வதன விநாயகரை வணங்கி நலம் பெறுவோமாக!

    Next Story
    ×