search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அணிகலன்களுடன் அபாரமாக காட்சியளிக்கும் வேங்கடவன்
    X

    அணிகலன்களுடன் அபாரமாக காட்சியளிக்கும் வேங்கடவன்

    • வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.
    • குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஏழுமலையானின் வலது மார்பில் பெரிய பிராட்டியான திருமகள் அமர்ந்த கோலமும், இடது மார்பில் பத்மாவதித்தாயார் அமர்ந்துள்ள கோலமும் இடம் பெற்றுள்ளன.

    இவ்விரண்டு தாய்மார்களும் தாமரை மலரின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

    இவர்கள் தங்களது இரண்டு கரங்களில் தாமரை மொட்டுகளை கையில் ஏந்திய கோலத்துடனும்,

    கீழே நீட்டிய ஒரு கரத்திலிருந்து பொன்னை வாரி வழங்கியபடியும், இன்னொரு கரத்தில் அமுதகலசமும்

    கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

    வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார்.

    அழகிய கிரீடம், உடல் முழுக்கத் தங்க நகைகளின் அணிவகுப்பு! உலகிலேயே அதிக அளவு தங்க அணிகலன்களுடன் அபாரமாகக் காட்சியளிக்கும் கடவுள் வேங்கடவன் மாத்திரமே.

    மேரு பச்சை என்னும் மூன்று அங்குல விட்டம் கொண்ட பச்சைக்கல் பதிக்கப்பெற்ற கிரீடம் முதல், வைரமுடி,

    முதலை வடிவத்தில் காதணிகள், தோளில், வைர தங்க அணிகள், வைரம் பதித்த மகரகண்டி தங்க துளசிமாலை,

    நூற்று எட்டு லக்குமி உருவம் பதிக்கப்பெற்ற தங்கக்காசு, வேங்கடேஸ்வர சகஸ்ரநாமம் வரையப் பெற்ற

    தங்கக் கவசம் பூணப்பெற்ற சாளக்கிராம மாலை தங்கத்தால் ஆன பாதகவசம், தசாவதாரம் பதிக்கப்பட்ட

    இடுப்புப்பட்டை, இடுப்பில் தொங்கும் தங்கத்தால் ஆன ஆயுதம், வங்கியைப் போன்ற காலணித் தண்டை

    இப்படி பல்வேறு வகையான அணிகலன்கள் இவருக்கு மாத்திரமே உலகில் உள்ளது.

    இத்தகைய கோலத்தில் தினந்தினம் பக்தர்களுக்கு அருட்கடாட்சம் வழங்குகிறார் திருவேங்கடவன்.

    அக்காலத்திய மன்னர்கள் ஏராளமான பொன் நகைகளை வேங்கடவனுக்கு அள்ளித் தந்துள்ளனர்.

    அதையடுத்து பத்மாவதி தாயாரின் திரவுருவம் பதித்த தங்கப் பதக்கத்தை ராமானுஜர் செய்து,

    ஏழுமலையானின் கழுத்தில் அணிவித்ததாக வேங்கடேச இதிகாச மாலை கூறுகிறது.

    இதே அமைப்பில் இன்னொரு ஏழுமலையான் சிலையை உருவாக்குவது என்பது இயலாத காரியம்.

    திருமலை தேவஸ்தானம் சார்பில் உருவாகும் கிளை ஆலயங்களில் இத்தகைய சிலையை நிறுவது இயலாது.

    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் அளவு குறைவாகவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×