என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஐம்பெரும் சக்திகள் அடங்கிய விநாயகர்
- நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.
- நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.
அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.
நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.
இந்த பஞ்சபூதங்களை நம்முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.
அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:
நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.
நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
நெருப்பு & அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்
காற்று & இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்.
ஆகாயம் & இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.
Next Story






